தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் குறுவை பருவத்திற்கு பயிர்க்கடன் வழங்குவது குறித்து ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. பெரியசாமி அவர்கள், மாண்புமிகு அரசு தலைமை கொறடா முனைவர் கோவி. செழியன் அவர்கள், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் முனைவர். இல.சுப்பிரமணியன் இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலையில் இன்று (08.06.2021) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்த ராவ் இ.ஆ.ப., அவர்கள் உடனிருந்தனர்.
குறுவை சாகுபடிக்கு பயிர் கடன் வழங்குவது குறித்து ஆய்வு கூட்டத்திற்கு பின் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. ஐ. பெரியசாமி அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியதாவது.
மாண்புமிகு நம்முடைய தமிழக முதலமைச்சர் அவர்கள் அணைக்கிணங்க தமிழ்நாட்டில் இருக்கின்ற 4451 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் உழவர்களுக்கு கடன் வழங்குவதற்கு, தங்களுடைய விவசாயத்தை உடனே ஆரம்பிப்பதற்கு பயிர் கடன் வழங்குவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் மிக மிக குறிப்பாக இந்த கூட்டத்தின் வாயிலாக எடுக்கப்பட்ட முடிவு புதிய உறுப்பினர்கள் நம்முடைய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அவர்கள் உடனே சேர்க்கப்பட வேண்டும்.
அனைத்து விவசாயிகளுக்கும், எந்த அளவிற்கு விவசாயிகள் கோரிக்கை வைத்திருக்கிறார்களோ அந்த அளவிற்கு பயிர் கடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஏற்கனவே இருந்த முறைப்படி புதிய உறுப்பினர்களுக்கு 30 விழுக்காடு என்ற முறையில் இல்லாமல் கூட்டுறவு சங்கங்களில் நாடி வருகின்ற விவசாயிகள் உறுப்பினர் அல்லாத விவசாயிகளையும் அவர்களை உறுப்பினர்களாக சேர்த்து, அவர்களுக்கு கடன் வழங்குவதற்கு வசதி செய்து தரப்பட வேண்டும். என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அவரது ஆணைக்கு ஏற்ப அந்தப் பணி இங்கே விவாதிக்கப்பட்டது அதை நிறைவேற்றுவதற்கு நம்முடைய கூட்டுறவுத்துறையினுடைய பதிவாளர். மற்றும் கூடுதல் பதிவாளர்கள், இணைப்பதிவாளர், மாவட்ட பதிவாளர்கள், சரக பதிவாளர்கள் அத்தனை பேரும் ஏற்றுக்கொண்டு விரைவில் அந்த பணியை துவங்க இருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாது நம்முடைய காப்பீடு சம்பந்தமாகவும் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு அவர்களுக்கு அந்த காப்பீடு தொகை வழங்குவதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்ளாமல் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு முதல்வர் அவர்கள், பொறுப்பேற்ற பிறகு அவர்கள் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதி, கொரோனா நிவாரண நிதி முதல் தவணை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் மூலமாக அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
குடும்ப அட்டைதாரர்கள் அத்தனைபேருக்கும் ஏறத்தாழ 2 கோடியே லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 10 இப்பொழுது அந்த நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது இப்பொழுது வருகின்ற 15ஆம் தேதி இரண்டாவது தவணை ரூபாய் 2000 அதேபோல 14 வகையான மளிகைப் பொருட்களும் ஏழை எளிய மக்கள் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் நம்முடைய நியாயவிலைக் கடைகளில் மூலமாக வழங்கப்பட இருக்கிறது இதுபோக நம்முடைய நியாய விலைக் கடைகளில் வழங்கக்கூடிய அரிசிகள் தரமானதாக தொடர்ந்து வழங்குவதற்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.
ஆங்காங்கே இருக்கக்கூடிய சிறு குறைகளையும் அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய அதிகாரிகள் கடைகளில் பணியாற்ற கூடியவர்கள் அவைகளை கவனமாக பார்த்து கிராமத்தில் இருக்கக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு நம்முடைய நியாய விலைக் கடைகளில் தரமான அரிசி வழங்குவதற்கும். அரசினுடைய பொருட்கள் அனைத்தும் தினம்தினம் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை வழங்குவதற்கும் அதற்குப்பின்னால் இந்தக் கொரோனா நிவாரண நிதி வழங்குவதற்காக கொடுக்கப்பட்டுள்ள அந்த அடையாள அட்டையை மதியம் 2 மணிக்கு மேல்
மாலை 5 மணிக்குள் வழங்குவதற்கும் நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். இந்த அரசு பொறுப்பேற்றுக் கொண்டது முதல் மக்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது இதுபோக ஏற்கனவே இந்த கூட்டுறவில் வாங்கிய கடனை 2015- 16 ஆவது ஆண்டிலே ஒத்திவைத்தவர்களுக்கு, 3 தவணையாக கட்டச் சொன்னவர்களுக்கு கடன் தள்ளுபடியில் கிடைக்கவில்லை என்ற கோரிக்கையை சொல்லி இருக்கிறார்கள். அது உடனே ஆய்வு செய்யப்பட்டு அந்த குறையை கலையை சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எல்லா தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் ஏற்கனவே வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி முறையாக வழங்கப்பட்டுள்ளனவா அதேபோல தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் உள்ள நகைக் கடன்கள், குறித்து அங்குள்ள அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் கடன் தள்ளுபடி, நகைகடன்கள், பொறுப்புகள், சொத்துக்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்படும். அதற்கு அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் 11,500 கோடி வரை பயிர்க்கடன் வழங்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது நம்முடைய உணவுக் களஞ்சியமான டெல்டாவிற்கு என எவ்வளவு பயிர்க்கடன் தேவையோ அவ்வளவு வழங்கப்படும். கடந்த ஆட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் இருக்கக்கூடியவர்கள் மீது நிறைய புகார்கள் வந்துள்ளது அந்த புகார்களை முறையாக ஆய்வு செய்து விசாரித்து அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் தரமான பூச்சிமருந்து வெளிச் சந்தையை விட விலை குறைவாக கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் குறுவை. சம்பா என பாகுபாடின்றி விவசாயிகளுக்கு தேவையான பயிர்க்கடன் வழங்கப்படும். கூட்டுறவு சங்கங்களின் நிதியாதாரம் நன்றாக உள்ளது. 23 மத்திய கூட்டுறவு சங்கங்களும் லாபத்தில் இயங்கி வருகிறது. அதேபோல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் 60 ஆயிரம் கோடி இருப்பு உள்ளது. எங்காவது குறைகள் இருந்தாலும் அவையும் சரி செய்யப்படும். யாருடைய பரிந்துரையும் இன்றி கட்சிப் பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளுக்கும் கடன் வழங்க இந்த அரசு உறுதி பூண்டுள்ளது.
இப்பொழுது நடைபெறும், முதலமைச்சர் தலைமையிலான அரசு அரசு சிறு குறு விவசாயிகள் யார் கடன் கேட்டு வந்தாலும் கூட்டுறவு வங்கிகளில் அந்த விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை குறித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். செல்லப்படும் என
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எஸ்.எஸ்.பழநிமாணிக்கம்(தஞ்சாவூர்), சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. துரை.சந்திரசேகரன் (திருவையாறு). திரு. க.அன்பழகன் (கும்பகோணம்). திரு.டி.கே.ஜி.நீலமேகம்(தஞ்சாவூர்), திரு. பூண்டி கே.கலைவாணன் (திருவாரூர்), திரு. கா.அண்ணாதுரை(பட்டுக்கோட்டை). திரு. அசோக்குமார்(பேராவூரணி). திரு. முகமது ஷாநவாஸ் (நாகப்பட்டினம்). திரு.ராஜ்குமார் (மயிலாடுதுறை), திரு. மாலி (கீழ்வேளுார்), திரு. நிவேதா முருகன் (பூம்புகார்). திரு. என். பன்னீர்செல்வம் (சீர்காழி). பெற்றோர் ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் திரு. எஸ் கல்யாணசுந்தரம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏனாதி.பாலு. கூடுதல் பதிவாளர் (நிதி மற்றும் வங்கிகள்) திரு. என். வில்வ சேகரன். கூடுதல் பதிவாளர் (விற்பனைத் திட்டம் மற்றும் வளர்ச்சி ) திரு.ஜி. ரவிக்குமார். கூடுதல் பதிவாளர் (டான்பெட்) திரு. எம். முருகன். மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
செய்தி நிருபர் தஞ்சை டுடே