தஞ்சை மே 29: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு மருத்துவமனையில் பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.

பாபநாசம் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் மற்றும் பிற நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், கொரானா ஸ்கிரினிங் சென்டரில் உள்ள படுக்கைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மருத்துவமனைக்குத் தேவையான தடுப்பூசிகள் மற்றும் பிற உயிர்காக்கும் மருந்துகள் இருப்பு குறித்தும் அவர் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இதேபோல் அய்யம்பேட்டை அரசு மருத்துவமனை, கபிஸ்தலம். சுவாமிமலை மற்றும் அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களையும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், எம்பிக்கள் சண்முகம், ராமலிங்கம், தமிழக சட்டமன்ற கொறடா கோவி.செழியன், பாபநாசம் சட்ட மன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா மற்றும் குடந்தை சட்ட மன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன், மருத்துவமனைகள் இணை இயக்குனர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.