தஞ்சை.ஜன. 17- முன்னாள் முதல்வரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவுனருமான எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த நாளையொட்டி, தஞ்சை இரயிலடியில் உள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கும், முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ சிலைக்கு முன்னாள் தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினரும், தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளருமான கு.பரசுராமன் தலைமையில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.கவினர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர்.


தஞ்சை தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளரும், ஒருங்கிணைந்த பால்வள தலைவருமான ஆர்.காந்தி, முன்னாள் மாவட்ட செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான துரை.திருஞானம், கரந்தை பகுதி கழக செயலாளரும், நிக்கல்சன் வங்கி தலைவருமான வி.அறிவுடை நம்பி, முன்னாள் நகர செயலாளரும், காவேரி சிறப்பங்காடி தலைவருமான வி.பண்டரிநாதன்.

மற்றும் கீழவாசல் பகுதி செயலாளரும், காவேரி சிறப்பங்காடி துணைத் தலைவருமான எஸ்.ரமேஷ், கோட்டைப் பகுதி செயலாளரும், அமைப்புச் சாரா ஓட்டுனர் சங்க செயலாளரும், அச்சக தலைவருமான வி.புண்ணியமூர்த்தி, மருத்துவக் கல்லூரி பகுதி கழக செயலாளரும், நிக்கல்சன் வங்கி துணை தலைவருமான வழக்கறிஞர் எஸ்.சரவணன், தெற்கு ஒன்றிய செயலாளர் துரை.வீரணன், மாவட்ட இணை செயலாளரும், முன்னாள் மேயருமான சாவித்திரி கோபால், மாவட்ட பெருவாளரும், முன்னாள் துணை மேயருமான மணிகண்டன், மாவட்டமகளிரணிசெயலாளரும், முன்னாள்மாவட்டபஞ்சாயத்துஒன்றியதலைவருமானஅழுதாரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் சண்முகபிரபு, பூபதி, தங்கம்மாள், கனகராஜ், கோட்டைப் பகுதி துணை செயலாளர் சிங்காரம், 51வது வட்ட செயலாளர் மனோகர், மாவட்ட எம் ஜிஆர் மன்ற துனண செயலாளர்கள் ஆர்.எம்.பாஸ்கர், தனபால், அருள் சகாயகுமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட அணைத்து சார்பு அணியினர் கலந்துக் கொண்டனர்.

ம.சசிக்குமார் நிருபர்,
தஞ்சை