தஞ்சை மாவட்ட டெல்டா பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 500 கன அடி மட்டுமே திறந்து விடப்பட்டிருந்தது, இப்பொழுது மழை குறைந்த நிலையில் வினாடிக்கு 3000 கன அடி திறந்து விடப்படுகின்றது.

‍அதேப்போல் கால்வாய் பாசனத்திற்காக தினமும் 400 கனஅடி திறந்து விடப்படுகின்றது, தற்போது நீர்மட்டம் 106 புள்ளி 77 அடியாக உள்ளது, நீர் வரத்து வினாடிக்கு 1270 கனஅடியாக இருந்தது.

செய்தி : ம.செந்தில்குமார்