தஞ்சாவூர் செப்.1-தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மேகதாது அணை கட்ட அனுமதிக்கமாட்டோம் என்றார்.

மேலும் ஆணையக் கூட்டத்தில் கேரள அரசு எதிர்ப்பு முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழக விவசாயிகள் சார்பில நன்றி, தமிழ்நாடு முதலமைச்சருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். பி.ஆர் பாண்டியன் கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே சட்டவிரோதமாக மேகதாது அணை கட்ட முயற்சிப்பதை தடுத்து நிறுத்த தமிழகத்திற்கு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் ஆதரவளித்திட வேண்டும்.

கர்நாடகாவின் வரைவுத் திட்ட அறிக்கையை நிராகரித்திட உதவிட வேண்டும் என வலியுறுத்தி கடந்த 30 ஆம் தேதி கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து வேண்டுகோள் விடுத்தோம். அதனை ஏற்றுக்கொண்ட அவர் உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி (நாளை 31ம் தேதி) ஆணையக் கூட்டத்தில் கேரள அரசு சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

அதனடிப்படையில் நேற்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு எதிராக சட்ட விரோதமாக மேகதாது அணை கட்டுவதை கேரளா அரசு அனுமதிக்காது என்று உறுதியோடு தெரிவித்துள்ளனர். இதனால் மேகதாது பிரச்சனையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது இதனை தமிழகம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.

எங்கள் கோரிக்கையை ஏற்று உடன் நடவடிக்கை எடுத்திட்ட கேரள முதலமைச்சர் மாண்புமிகு பினராய் விஜயன் அவர்களுக்கு தமிழக விவசாயிகள் சார்பில் நன்றியை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து தமிழக- கேரள நல்லுறவை வலுபடுத்தும் வகையில் முதலமைச்சர்
மு க ஸ்டாலின் அவர்களும் கேரள முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்க முன்வரவேண்டும்.

காவிரி டெல்டா குறுவை சாகுபடி தற்போது கதிர் வந்து கொண்டிருக்கிற நிலையில் விளைநிலங்கள் தண்ணீரின்றி காய்ந்து வெடித்து கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.சம்பா சாகுபடி பணியையும் துவங்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறையால் குறுவை பயிர்கள் கருகும் நிலையில்,சம்பா சாகுபடியை துவங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்திற்கு தண்ணீரை கர்நாடகாவிடம் பெற்று தருவதற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கர்நாடக,தமிழக பாசனப் பகுதிகளையும், அணைகளையும் ஆணையத் தலைவர் நேரில் பார்வையிட்டு உரிய தண்ணீரை பெற்றுத் தருவதற்கு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.இல்லையேல் ஒட்டுமொத்த குறுவை, சம்பா அழிந்து போகும் பேராபத்து ஏற்படும் என எச்சரிக்கிறேன் என்றார்.
மேற்கண்டவாறு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர்
பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/