தஞ்சாவூர் ஆக 26 மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டது.
மருத்துவக் கல்லூரி டீன் ரவிக்குமார் இத் திட்டத்தினை தொடங்கி வைத்தார் இதன் மூலம் இரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட தொடர் நோய் பாதிப்பில் உள்ள நோயாளிகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கான மருந்துகள் அவர்களது வீடுகளுக்கு தேடிச்சென்று வழங்கப்பட உள்ளது.
பிசியோ தெரபியும் இத்திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. நோயாளிகளின் முகவரிகள் பெறப்பட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மூலம் பரிசோதனை மற்றும் மருந்துகள் அவர்களது வீடுகளுக்கு சென்று வழங்கப்பட உள்ளதாக டீன் ரவிக்குமார் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மருத்துவமனை நிலைய அலுவலர் டாக்டர் செல்வம் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.
செய்தி க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/