தஞ்சாவூர்,டிச.5- 2021 முதுகலை நீட் கலந்தாய்வினை விரைந்து முடித்திட வேண்டும், மருத்துவர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தேசிய அளவிலான முதுகலை மேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் முதுகலை 2 மற்றும் 3-ம் ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு பிரஸிடெண்ட்ஸ் டாக்டர் அசோசியேசன் நிர்வாகி பயிற்சி டாக்டர் நவீன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாணவ- மாணவிகள் கருப்புப் பட்டை அணிந்து கலந்து கொண்டு கோஷமிட்டனர். மேலும் புறநோயாளிகள் பிரிவில் மருத்துவப் பணிகளை புறக்கணித்தனர். இந்த சம்பவம் மருத்துவக் கல்லூரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/