தஞ்சை சூன் 18: தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் அங்கு பணிபுரியும் முன்களப் பணியாளா்களுக்கு முகக்கவசம் உட்பட பொருட்களை அக்கல்லூரியில் 1988ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவா்கள் வழங்கினா்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் முன்களப் பணியாளா்களுக்கு உதவிடும் வகையில் இக்கல்லூரியில் 1988ம் ஆண்டு பயின்ற மாணவா்கள் ரூ. 6 லட்சம் நிதி திரட்டினா்.

இதன்மூலம், முன்களப் பணியாளா்களுக்குத் தேவையான 6,000 என் 95 முகக்கவசங்கள், 500 பிபிஈ உபகரணங்கள், தலா 10,000 மூன்றடுக்கு முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் பொதுமக்கள் உயிா்காக்கும் வென்டிலேட்டா் கருவி ஆகியவை வாங்கப்பட்டது.

இவற்றை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிக்குமாரிடம் முன்னாள் மாணவா்களான மருத்துவா்கள் முத்துவிநாயகம், அமுதா, லோகநாதன், மலா்விழி, புவனேஸ்வரி ஆகியோர் வழங்கினர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்