தஞ்சாவூர், மார்ச்.14 – தஞ்சை மாநகரில் 24.வது சிறப்பு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த மேயர் சண்.ராமநாதன். இது வரை 3.14 லட்சம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

கொரோனா தடுப்பூசி தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரை 23 கட்டமாக தடுப்பூசி செலுத்தப்பட் டுள்ளது. நேற்று 24-வது தடுப் பூசி முகாம் தமிழகம் முழுவதும் தஞ்சை நடைபெற்றது.

தஞ்சை மாநகராட்சியிலும் 18 இடங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 250-க்கும் மேற்பட்ட பணியா ளர்கள் கலந்து கொண்டு தடுப்பூசியை செலுத்தினர். இதில் முதல் தவணை தடுப் பூசி மற்றும் 2-வது கட்ட தடுப் பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போன்றவை செலுத்தப்பட் டது.

24-வது சிறப்பு முகாம் தஞ்சை முனிசிபல் காலனி யில் உள்ள மாநகராட்சி நடு நிலைப்பள்ளியில் நடந்த முகாமை மாநகராட்சிமேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், தஞ்சை மாநக ராட்சி பகுதியில் இதுவரை முதல் தவணையாக 1 லட் சத்து 70 ஆயிரத்து 740 பேருக் கும், 2-வது தவணையாக 1 லட்சத்து 39 ஆயிரத்து 473 பேருக்கும். பூஸ்டர் தடுப்பூசி யாக 4 ஆயிரத்து 751பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தம் 3 லட் சத்து 14 ஆயிரத்து 967 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் முககவசம் அணிந்து செல்ல வேண்டும். அதே போன்று அனைவரும் தடுப்பூசிசெலுத்த வேண்டும். முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் உரிய கால கட்டத்தில் தவறாது 2-வது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். இதில் மாநகராட்சிதுணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூ பதி, மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம், சுகா தார ஆய்வாளர் ரமேஷ், மற் றும்பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாநகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/