தஞ்சை மே:1. கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஏ ஐடியூசி தொழிற் சங்கத்தின் சார்பில் 135 ஆவது மே தின கொடியேற்று நிகழ்ச்சி, காலை 10 மணிக்கு தஞ்சாவூர் கரந்தை போக்குவரத்து கழக புறநகர் கிளை முன்பு மத்திய சங்க பொதுச்செயலாளர் டி.கஸ்தூரி தலைமையில், கொடியினை ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி. அப்பாத்துரை, ஜெபமாலைபுரம் நகர் கிளை முன்பு ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம் ஆகியோர் மே தின கொடியினை ஏற்றிவைத்தார்கள்,போக்குவரத்து ஏஐடியூசி சங்க மாநில துணைத் தலைவர் துரை.மதிவாணன்சிறப்புரை ஆற்றினார்.


பொதுச்செயலாளர் டி. கஸ்தூரி,தலைவர் ஜி.சண்முகம், துணைச் செயலாளர் டி.சீனிவாச தினேஸ்
தொழிற்சங்க நிர்வாகிகள் பீர்தம்பி ,கே.சுந்தர பாண்டியன், ஞானசேகரன் , சுப்பிரமணியன், தங்கராசு ,ரங்கதுரை, ராஜமன்னார் , இளங்கோவன் ,விசிறி சாமியார் முருகன் உள்ளிட்டோர்முன்னிலை வகித்து பங்கேற்றனர்.


தஞ்சை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் முத்துஉத்திராபதி மே தின கம்யூனிஸ்ட் கட்சிக் கொடியையும், ஏஐடியூசி மே தின கொடியினை மாநில செயலாளர் சி.சந்திரகுமார் அவர்களும் ஏற்றி வைத்தனர், ஏஐடியூசி ஆட்டோ சங்க சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.செந்தில் நாதன், கட்டுமான சங்க சார்பில் பி.செல்வம், மாலை நேர காய்கறி அங்காடி முன்பு மாவட்ட தலைவர் வெ.சேவையா, தெருவியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.பி முத்துக்குமார், டாஸ்மாக் சங்க சார்பில் மாவட்ட செயலாளர் கோட்டீஸ்வரன், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு ஏஐடியூசி மாநில பொருளாளர் தி.கோவிந்தராஜ் தலைமையிலும் மே தினகொடிகள் ஏற்றப்பட்டது.

தொழிலாளர் நலச்சட்டங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக திருத்தம் செய்த மோடி அரசை கண்டித்தும், மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லியில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தும், மக்களுக்கு சேவை செய்யும் அரசு போக்குவரத்துக் கழகம், மின்சாரம், வங்கி, நுகர்பொருள் வாணிபக் கழகம் உள்ளிட்ட பொதுத்துறைகளை தனியார்மய ஆபத்திலிருந்து பாதுகாக்கவும், மின்சார சட்டத் திருத்தம் சுற்றுச்சூழல் சட்டத்திருத்தம் திரும்பப் பெறக்கோரியும்.


கார்ப்பரேட் காவி மய ஆபத்துக் களிலிருந்து நாட்டைபாதுகாக்கவும் ஒன்றிணைந்த போராட்டங்களை முன்னெடுக்கவும் உறுதியேற்கப்பட்டது. இதே போல் மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பில் தஞ்சாவூர் மானோஜிபட்டியில் மாநகர செயலாளர் இராவணன் தலைமையில் மே தின கொடியை பாபு ஏற்றி வைத்து உரையாற்றினார்.நிர்வாகிகள் தேவா ,அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்
தஞ்சை