தஞ்சாவூர் பிப்: 25. தஞ்சை டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நடைபெற்றது டாஸ்மாக் அனைத்து சங்க நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி வீரய்யன் கோடீஸ்வரன் வினோதன் ராஜசேகரன் வேல்முருகன் தலைமை வகித்தனர்.

ஆர்ப்பட்ட நோக்கங்களை விளக்கி வலியுறுத்தி  ஏஐடியுசி மாநில செயலாளர் சந்திரகுமார், சிஐடியு மாநில செயலாளர் ஜெயபாலன், எல்பி எஃப் மாவட்ட செயலாளர் சேவியர்ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர், தமிழக அரசே டாஸ்மாக் நிர்வாகமே! டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடவும் விற்பனை நேரத்தை  குறைத்து பணி பாதுகாப்பு வழங்கிட உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் அன்பு, ஏஐடியுசிமாவட்ட செயலாளர் தில்லை வனம் முறைசாரா சங்க மாவட்ட செயலாளர் பேர்நீதி ஆழ்வார் ஏஐடியுசி மாநிலத் துணைத் தலைவர் துறை மதிவாணன் உள்ளிட்ட நிர்வாகிகளும் டாஸ்மார்க் பணியாளர்கள் குடும்பத்துடன்  கலந்து கொண்டனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.