தஞ்சாவூர் பிப் 8 தஞ்சையை அடுத்த மாரியம்மன் கோவில் வணிகர் சங்க தலைவராக இருப்பவர் அன்பு இவரையும் செயலாளர் லாரன்ஸையும் சிலர் தாக்கினர், இதில் படுகாயம் அடைந்த இருவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர், வணிகர் சங்க நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து தாக்கியவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தஞ்சையை அடுத்த மாரியம்மன்கோவில் கடைவீதியில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இதனால் ஓட்டல்கள் மளிகை கடைகள் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன மேலும் வணிகர் சங்க நிர்வாகிகள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு முயற்சி செய்தனர் இதனை அறிந்த தஞ்சை தாலுகா போலீசார் விரைந்து வந்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையும் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தும் முடிவுகைவிடப்பட்டது.

கூட்டத்தில் மாரியம்மன் கோவில் வணிகர் சங்க நிர்வாகிகள் மீது கொடுக்கப்பட்டுள்ள பொய் புகாரை ரத்து செய்ய வேண்டும் அடிதடி மற்றும் வன்முறை செயல்களில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் மாரியம்மன் கோவில் கடைவீதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் தொடர்ந்து நடைபெற்று வரும் மனிதர்கள் மீதான தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செய்தி க.சசிகுமார் நிருபர்
தஞ்சை.