தஞ்சாவூர் செப் 14: தஞ்சை மாவட்டம் பாபநாசம் – சாலியமங்கலம் நெடுஞ்சாலையில் உள்ள பாபநாசம் ரயில்வே கேட்டில் வரும் வியாழக்கிழமை (16ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், அன்றைய நாளில் அந்த வழியாக போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினரும், பாபநாசம் ரயில் பயணிகள் சங்கத்தினா் செயலருமான டி. சரவணன் கூறியதாவது:
வரும் 16ம் தேதி பாபநாசம் – சாலியமங்கலம் நெடுஞ்சாலையில் உள்ள பாபநாசம் ரயில்வே கேட்டில் தண்டவாளம் மற்றும் சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை பாபநாசம்-சாலியமங்கலம் நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து முழுவதும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்துவதை வியாழக்கிழமை தவிா்க்க வேண்டும்.
கும்பகோணம் பகுதியில் இருந்து வருபவா்கள் தாராசுரம், கோவிந்தகுடி, ஆவூா் வழியாகவும், தஞ்சாவூரிலிருந்து வருபவா்கள் திட்டை, மெலட்டூா், வழியாகவும் பாபநாசம் பொதுமக்கள் கோபுராஜபுரம் ரயில்வே கேட், பெருங்குடி வழியாகவும் திருக்கருகாவூா் – சாலியமங்கலம் சாலை வழியே பயணிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/