தஞ்சாவூர் அக்: 4 -தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தஞ்சை காந்திஜி சாலையில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் உள்ள காந்தி கிராப்ட் விற்பனை நிலையத்தில் மகாத்மா காந்தி 153 வது பிறந்த நாள் விழா மற்றும் தீபாவளி திருவிழாவை முன்னிட்டு கதர் சிறப்பு விற்பனை தொடக்க விழாவும் நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமைதாங்கி மகாத்மா காந்தியின் படத்தை திறந்து வைத்து கதர் சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார் இதுகுறித்து கதர் கிராம தொழில் துறை உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது.

கடந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்திற்கு கதர் விற்பனை குறியீடு 77 பாயிண்ட் 70 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு குறியீட்டினை 80% எட்டப்பட்டது இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்திற்கு எழுபத்தி ஏழு வயது 70 லட்சம் விற்பனை குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது இந்த சிறப்பு விற்பனைக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது அரசு ஊழியர்களும் பொதுமக்களும் கதர் ஆடைகளை வாங்கி தீபாவளியை பாதுகாப்புடன் கொண்டு கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும் பாரத பிரதமரின் சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிகள் மூலமாக கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது தமிழக அரசு மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை வழங்கி வருகிறது இவ்வாறு அவர் கூறினார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/