தஞ்சாவூர் ஆக 14: மதுரை பராம்பரியமும், பழமையும் வாய்ந்தது மதுரை ஆதினமாகும் இவ்வாதின கர்த்தாவாக அருணகிரிநாத திருஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியர் இருந்து செயலாற்றி வந்தார்.

1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சைவ சமய திருமடமான மதுரை ஆதினத்தின் 292வது ஆதின கார்த்தாவாக 44 ஆண்டுகள் செயற்பட்டவர் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்,

1980 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற இவர் 40 ஆண்டுகளுக்கு மேலாக மதுரை ஆதின கர்த்தராக விளங்கியவர்.

கடந்த ஆகஸ்ட் 08ஆம் தேதி உடல் நிலை குறைவின் காரணமாக அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு சுவாச கோளாறு உண்டானதால் செயற்கை சுவாசம் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

நேற்று 13 ஆகஸ்ட் 2021யில் சிகிச்சை பலனின்றி மறைந்தார்.

இந்நிலையில் திருவாவடுதுறை மூத்த தம்பிரான் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் அவர்கள் 293-வது மதுரை ஆதினமாக நியமிக்கப்படவுள்ளார்.

செய்தி தஞ்சை டுடே நிருபர்.
https://thanjai.today/