தஞ்சை பிப் 25, தஞ்சை, திரைப்பட இயக்குநர் ராசி.மணிவாசகன் அவர்கள் தஞ்சையை தளமாகக் கொண்டு M Screens என்ற பெயரில், திரைப்படங்கள், குறும்படங்கள், விளம்பர படங்கள், தனிப்பாடல்கள் என பல்வேறு ஊடகத் தொடர்பான வெளியீடுகளை சிறப்பாக 20 ஆண்டுகளுக்கு மேலாக செய்து வருகின்றார்.

திரைப்பட மற்றும் ஊடகத்துறையில் சிறந்த அநுபவம் உடைய இயக்குநர் ராசி.மணிவாசகன், தஞ்சையில் சென்னை திரைப்படத்துறையினர் பயன்படுத்தும் தரத்திற்கு M Screens என்ற பெயரில் நுண்கலையகத்தினை ( Recording & Dubbing Theater) இன்று 25 பிப் 2021 60 SMR காம்ப்ளக்ஸ் அண்ணா நகர் நாஞ்சிக்கோட்டை சாலையில் தொடங்குகின்றார்.

25-பிப்-20221 இன்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் உயர் தொழில்நுட்பத்தில் நவீன கருவிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள M Screens டப்பிங் மற்றும் ரெக்கார்டீங் அரங்கத்தை மாண்பு மிகு ஆர்.வைத்தியலிங்கம் பி.ஏ. எம்.பி( பாராளு மன்ற உறுப்பினர்) அவர்கள் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்குகின்றார்.

இவ் M Screens டப்பிங் மற்றும் ரெக்கார்டீங் அரங்கத் திறப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக திருமிகு. பி.ஆர்.பாண்டியன் அவர்கள் தலைவர், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு, கலைமாணி, திரைப்பட பின்னணி பாடகி திருமதி.சின்னப்பொண்ணு குமார் அவர்கள், மாநில தலைவர், தமிழக நாட்டுப்புற அனைத்து கலைஞர்கள் ஒருங்கிணைந்த சங்கம் கலைமாமணி, திரைப்பட பின்னணி பாடகர் முனைவர் திரு.சித்தன்ஜெயமூர்த்தி அவர்கள்.

மற்றும் மாநில துணைத் தலைவர், தமிழக நாட்டுப்புற அனைத்து கலைஞர்கள் ஒருங்கிணைந்த சங்கம் கலைச்சுடர்மணி, திரைப்பட பின்னணி பாடகர் டாக்டர்.இரத்தநாடு கோபு அவர்கள்,

மாநில பொருளாளர், தமிழக நாட்டுப்புற அனைத்து கலைஞர்கள் ஒருங்கிணைந்த சங்கம் தொழிலதிபர் திருவாரூர் செல்வி.கிரிஜா அவர்கள் கெளரவ தலைவர், தமிழக நாட்டுப்புற அனைத்து கலைஞர்கள் ஒருங்கிணைந்த சங்கம்,

வீதிநாடக வித்தகர் தெற்குநத்தம் ச.சித்தார்த்தன் அவர்கள் மாநில கலைத்துறை செயலாளர், திராவிடர் கழகம், கவிஞர் தஞ்சை லலிதா மோகன் அவர்கள் நிறுவனர், நம்ம ஊரு களஞ்சியம் யூடியுப் சேனல், சென்னை, திருமிகு.Rtn.Er.P.R.இளங்கோவன் அவர்கள் தலைவர், டெல்டா தொழில் முனைவோர் கூட்டமைப்பு, திருமிகு. A.G.மோகன் அவர்கள் நிர்வாக இயக்குநர், A.G.குரூப் ஆஃப் கம்பெனிஸ். திருமதி. வாசுகி பி.கே.செல்வம் அவர்கள் காப்பாளர், கலைமாமணி பி.கே.செல்வம் கலைக்குழு ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இவ்விழாவிற்கு அனைவரையும் வருக வருகவென திரைப்பட இயக்குநர் ராசி.மணிவாசகன், வ.லதா மணிவாசகன், பொறியாளர் ம.பூர்ணிகா பி.டெக் (Cognizant),ம.தமிழ்ச்சூரியன் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் இன்முகத்துடன் வரவேற்கின்றனர்.

இவ்விழா சிறப்படையவும், நிறுவனம் பல்வேறு வெற்றிகள் மற்றும் தஞ்சை ஊடகத்துறைக்கு வழிகாட்டுதலாக அமையவும், தஞ்சை டுடே M Screens நிறுவனத்தை வாழ்த்தி பெருமையடைகின்றது.

செய்தி நிருபர் தஞ்சை டுடே.