தஞ்சை மே 06 தமிழகம் முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்த வகையில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி பால், மருந்து கடைகள் இயங்க எந்த தடையும் கிடையாது வழக்கம் போல் இயங்கலாம், மளிகை, காய்கறிக் கடைகள் மற்றும் தேநீர் கடைகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை, பகல் 12 மணி வரை மட்டும் இயங்கும். உணவகங்கள், அனைத்து நாட்களிலும், காலை, 6:00 மணி முதல், 10:00 மணி வரை; பகல் 12:00 மணி முதல், மாலை, 3:00 மணி வரை; மாலை, 6:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை செயல்படலாம் பார்சல் வழங்க மட்டும் அனுமதி.

அனைத்து இறைச்சி, மீன், கோழிக்கறி கடைகள், திங்கள் முதல், வெள்ளிக்கிழமை வரை, பகல், 12:00 மணி வரை மட்டும் திறந்திருக்கும். டீக்கடைகளிலும் பார்சல் வழங்க மட்டும் அனுமதி. மற்ற கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு, அனைத்து நாட்களிலும், அனுமதி இல்லை,

கொரோனா பரவலால் மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. ஒருபக்கம் உயிரை பறிக்கும் கொரோனா என்றால் மறுபக்கம் வேலை இழப்பு, வருமானம் இழப்பு னன்று பலவகையிலும் பொருளாதாரத்தில் சரிவை மக்கள் சந்திக்கும் நிலை உள்ளது.

சிறிய அளவிலான ஜெராக்ஸ் கடைகள், பேன்ஸி ஸ்டோர், செருப்பு கடைகள், பூக்கடைகள், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் விற்பனை பொருட்கள், ஜவுளிக்கடைகள் போன்றவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் மிகுந்த பொருளாதார இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல் தினக்கூலித் தொழிலாளர்களும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வருமானத்தை நம்பியே அவர்களின் குடும்பமும் உள்ளது, அனைத்து அரசு அலுவலகங்களும், 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கும். அரசு ஊழியர்கள், ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை என, சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும். இதேபோல் தனியார் நிறுவனங்களில் 50 சதவீத பணியாளர்கள் பணியாற்றலாம் என்று தெரிவிக்கப்படடுள்ளது.

பஸ் போக்குவரத்து செயல்படும் போது பஸ்ஸ்டாண்டில் உள்ள கடைகளை மட்டுமாவது இயங்கச் செய்ய வேண்டும். வெளியூர்களில் இருந்து குழந்தைகளுடன் வருபவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மக்களின் இந்த நிலையை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பை கடைபிடிப்போம்!, கொரோனாவை தடுப்போம்!!,, மனிதகுலத்தை காப்போம்!!!

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.