தஞ்சை ஏப்ரல் 22: தஞ்சை மாவட்டத்தில் வரும் 25ம் தேதி மற்றும் மே 1ம் தேதி மதுபானக்கடைகள் மூடப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;

வரும் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மகாவீர் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இதேபோல் மே 1ம் தேதி மே தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.  இந்த இரண்டு நாட்களிலும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகள் மூடப்படுகிறது. அன்று தஞ்சை மாவட்டத்தில் இயங்கி வரும் மதுபான கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், உரிமம் பெற்ற விடுதிகள் உடன் இணைந்த மதுக்கூடங்கள், மன்றங்கள் ஆகியவற்றில் இரண்டு நாட்களும் மது விற்பனை செய்யப்பட மாட்டாது. என்று மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்