தஞ்‍சை ஜன.05 செவ்வாய்க் கிழமை காலை 11 மணி முதல் தஞ்சை மேம்பாலத்தில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் தனித்துவமான மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது, இதில் இதில் செஞ்சுலுவை சங்கத்தினர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக மதியம் 125 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது, இதனை லயன்ஸ் கிளப் ஏ.எம்.சி அலுமினிகள் மற்றும் விர்ச்சுவல் ஸ்பெஷாலிட்டி குழுவின் மூலம் ஒருங்கு செய்யப்பட்டு வழங்கியது.

இதனை ஏ.எம்.சி அலும்னி லயன்ஸ் சங்கத்தின் விரிவாக்கத் தலைவரும், ஒருங்கிணைப்பாளருமான லயன் அமல். ஸ்டாலின் பீட்டர் பாபு, அவர்கள் கலந்து கொண்டு சங்கத்தினர் சார்பில் இந்தச் சேவையினை வழங்கினார், பின்பு ஏ.எம்.சி அலும்னி சங்கத்தின் சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கும், செஞ்சிலுவைச் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் திரு. முத்துக்குமார் அவர்களுக்கும், கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொண்டனர்.

செய்தி : புயலரசு