தஞ்சாவூர் ஆக 6: தஞ்சை லயன்ஸ் கிளைகள் பல சமூக நலப்பணிகளில் செயல் பட்டு வருவதை பலரும் அறிவார்கள்.

அதில் ஒரு பணியாக மரங்கள் நடும் பணியை செய்து வருகின்றனர், அண்மைகாலத்தில் தஞ்சை லயன்ஸ் வசந்தம் உறுப்பினர்கள் தஞ்சை அருகே சோழர் காலத்தில் கட்டப்பட்ட செங்கழுநீர் ஏரியை கிராம மக்கள் ஒன்றிணைந்து தூர்வாரிய நிலையில் ஏரி முழுவதும் 5 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் பணியை துவங்கினார்கள்.

அதன் தொடர்ச்சியாக ஹீலர் லயன் திரு வில்லியம் ஸ்டீபன்சன் அவர்கள் பனை மரங்கள் உள்ள கிராமப்பகுதிகளுக்கு பயணித்து அங்கு விழுந்து கிடக்கும் பனம்பழங்களை சேகரித்து அதனை காய வைத்து நடுவதற்காக சேகரிக்கும் பணியை செய்து வருகின்றார்.

இதுவரையில் அவர் 2250 பனை விதைகளையும் ‍சேகரித்துள்ளார் என்பதை தஞ்சை லயன்ஸ் வசந்தம் பெருமையுடன் தெரிவித்துள்ளது.

மரங்கள் நடுவோம் மனிதம் காப்போம், மரங்கள் நமக்கு வரங்கள் என்கின்ற முழக்கத்துடன் முன்னேடுக்கும் இவர்களோடு இணைந்து பணி புரிய மரங்கள் நடுவதற்கும் நீங்கள் சேகரித்துள்ள வீதைகள் செடிகளை வழங்கவும் 0091 7708984242 என்கின்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

செய்தி தஞ்சை டுடே நிருபர்.
https://thanjai.today/