உலகத்திலேயே முதன் முதலாக பாட்டாளி வர்க்க அரசு அமைத்த ரஷ்ய புரட்சியின் தலைவர் லெனின் அவர்களின் 151 வது பிறந்தநாள் விழா உறுதியேற்பு நிகழ்ச்சி தஞ்சையில் இன்று நடைபெற்றது. முதலாளித்துவ தத்துவத்திற்கும் , உற்பத்தி முறைக்கும் மாற்றாக எந்த தத்துவமும் இல்லை என்ற நேரத்தில் காரல் மார்க்சும் ,ஏங்கல்சும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளி உலகுக்கு அளித்து முதலாளித்துவத்திற்கு மாற்று மார்க்சிம் என்ற அறிவித்து பிரகடனப்ப டுத்தினார்கள்.

முதலாளித்துவ நாடுகளும் , முதலாளிகளும் மார்க்சியத்தை பகற்கனவு என்று எள்ளி நகையாடிய வேளையில் 1917-ஆம் ஆண்டு நவம்பரில் ரஷ்யாவின் மகத்தான தலைவர் லெனின் அவர்கள் நிலப்பிரபுத்துவ ஜார் மன்னராட்சி முறையையும் , முதலாளித்துவ உற்பத்தி முறையையும் புரட்சி மூலம் அகற்றி தொழிலாளர்கள் விவசாயிகள் தலைமையில் சுரண்டலற்ற அமைப்பு முறையான சோசலிச ஆட்சியை அமல்படுத்தினார்.

உலக பாட்டாளி வர்க்கத்திற்கும் , அடிமைப்பட்டுக் கிடந்த மூன்றாம் உலக நாடுகளின் விடுதலைக்கும் , அனைத்து நாட்டு மக்களுக்குமான தேசிய இன விடுதலைக்கு வழிகாட்டியும் , பெண்கல்வி பெண்ணுரிமை சமத்துவத்தை நிறைவேற்றிய மகத்தான மக்கள் தலைவர் லெனின் அவர்களுக்கு அவருடைய 150-ஆவது பிறந்த நாள் விழா உறுதியேற்பு நிகழ்ச்சி தஞ்சாவூர் ரயிலடி முன்பாக இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது . நிகழ்விற்கு சிபிஐஎம் மாநகரச் செயலாளர் என். குருசாமி தலைமை வகித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி சிறப்புரையாற்றினார். சிபிஜ மாவட்ட பொருளாளர் என்.பாலசுப்பிரமணியன், சிபிஐ வடக்கு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.தில்லைவனம், மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநகரச் செயலாளர் ராவணன், மக்கள் அதிகாரம் தேவா , ஏஐடியூசி மாநிலச் செயலாளர் சி. சந்திரகுமார் ,மாவட்ட தலைவர் வெ. சேவையா , தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி ( மாலெ மாவோ சிந்தனை) மாவட்ட செயலாளர் அருண்ஷோரி, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் எம்.பி.நாத்திகன் , இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சஜி. அரவிந்தசாமி,சிஐடியூ மணிமாறன் ,விவசாயிகள் போராட்ட ஒருங்கி ணைப்புக் குழு நிர்வாகி ஆர் கே செல்வகுமார் , ஆர் எம் பி ஐ கட்சியின் மாவட்டச் செயலாளர் மதியழகன் ,தஞ்சை நஞ்சை கலைக்குழு அமைப்பாளர் சாம்பான் ,தவத்திரு விசிறி சாமியார் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினார்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன் நன்றி கூறினார்.

முன்னதாக லெனின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி சிறப்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் இந்தியாவின் அனைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டங்களை ஆதரிப்பது ஒன்றிணைப்பது ,உலக நாடுகளில் வசிக்கின்ற ஏழை எளிய உழைக்கும் மக்களிளை பசி பஞ்சம் பட்டினியில் இருந்து பாதுகாப்பது, மூன்றாம் உலக நாடுகளை தனது அடிமையாக்க அச்சுறுத்தும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களை வீழ்த்துவது.

தமிழ்நாட்டின் உரிமைகளை தொடர்ந்து பறித்து வருகின்ற நாட்டின் இயற்கை வளங்களையும் செல்வங்களையும் கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க துணையாக இருக்கின்ற, தொழிலாளர்கள்,விவசாயிகளின் உரிமைகளை பறிக்கின்ற மோடி அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒன்றிணைப்பது, கருத்துரிமை எழுத்துரிமை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகளைப் பறிக்கின்ற, காவி மய த்தை இந்தியா முழுவதும் அமல்படுத்த கின்ற ஆர்எஸ்எஸ் , சங்பரிவார் கும்பல்களுக்கு எதிராக , கார்ப்பரேட் காவிபாசிசத்தை நாட்டை விட்டு விரட்டி அடிப்பது , இடதுசாரிகள் ஒற்றுமைக்கும், ஜனநாயக சக்திகளின் ஐக்கியத்திற்கும் தொடர்ந்து பாடுபடுவது என்று உறுதியேற்க்கப்பட்டது.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.