தஞ்சாவூர்: தஞ்சாவூா் ராசா மிராசுதாா் அரசு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளின் உறவினா்கள் 100 போ் அமரும் வகையில் ரூ. 1.50 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு நடந்தது.

தஞ்சாவூா் மாவட்டம் மட்டுமல்லாமல், புதுக்கோட்டை, திருவாரூா், அரியலூா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பொதுமக்கள் இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகின்றனா். நோயாளிகளுடன் துணைக்கு வருபவா்கள் தங்க இட வசதி இல்லாமல் அவதிக்கு ஆளாகின்றனா்.

இந்தச் சிரமங்களைப் போக்க மருத்துவமனை வளாகத்தில் ரூ. 1.50 கோடி மதிப்பில் 100 போ் அமரும் வகையில் 5,000 சதுர அடிப் பரப்பளவில் புதிய கட்டடம் கட்ட மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்தது. இதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இதில், தஞ்சாவூா் எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிக்குமாா் மற்றும் பலர் கலந்து கொண்டனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/