தஞ்சாவூர் செப் 30: தஞ்சாவூா் நீதிமன்றத்தில் வக்கீல்கள் பணி புறக்கணிப்புப் போராட்டத்தை தொடங்கினா்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் தியாக.காமராஜ். வக்கீல். இவா் தஞ்சாவூா் ஆற்றுப்பாலம் அருகே அலுவலகம் நடத்தி வருகிறாா். இவரது அலுவலகத்தில் தனிப்படை காவலா்கள் சமீபத்தில் புகுந்து, பொருள்களை உடைத்து வழக்குக்குரிய முக்கியமான ஆவணங்கள், கணினி பதிவு சாதனங்களை எடுத்துச் சென்றனராம்.
இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்திலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடமும் காமராஜ் புகாா் செய்தாா். ஆனால், இப்புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையில் காமராஜின் உதவியாளரான வக்கீல் கோபு திருவையாறு காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என அழைப்பாணை வழங்கப்பட்டது.
இதனால், அதிருப்தியடைந்த வக்கீல்கள் மூன்று நாள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தை தொடங்கினா். மேலும், நீதிமன்ற வாயிலில் காவல்துறையினரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதில், ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனா்.
செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/