தஞ்சாவூர் ஆக 23: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் இரு புதிய வழித் தடங்களில் பேருந்து சேவை தொடக்க விழா நடந்தது.

ஆடுதுறை – கும்பகோணம் – சுவாமிமலை இடையே இயக்கப்படும் புதிய வழித்தடப் பேருந்தை ஆடுதுறையிலும், கும்பகோணம்- போழக்குடி இடையே இயக்கப்படும் புதிய வழித்தடப் பேருந்தை போழக்குடியிலும் அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் மண்டலப் பொது மேலாளா் ஜெபராஜ் நவமணி, துணை மேலாளா் (வணிகம்) ஸ்ரீதா், கிளை மேலாளா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/