சென்னை: மடிக்கணினிகள் படிப்படியாக கொள்முதல் செய்யப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசும் போதும் அவர் கூறுகையில், 2011ம் ஆண்டு முதல் 2020 வரை விலையில்லா மடிக்கணினி திட்டத்திற்கு 6349 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி 2017- 18ம் ஆண்டிற்கான நிலுவை உட்பட மொத்தமாக 11லட்சத்து72,817 மடிக்கணிகள் வழங்கப்படவேண்டியுள்ளது. மடிக்கணினிகள் படிப்படியாக கொள்முதல் செய்யப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்றார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/