பி.ஜேபியின் முன்னனி தலைவர்களில் ஒருவர், நாங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களிடம் ஆறு மாதத்திற்கு கால்ஷிட் வாங்கியிருக்கின்றோம் என்று வெளிப்படையாக பேசினார், இப்போது ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றவுடன், மற்ற பழைய பிரபலங்கள் ரொம்ப பிஸியாக பிஜேபி பிரச்சாரத்தில் உள்ளனர்.

இப்போது பிஜேபி ஊருக்கு ஊர் கொண்டாடும் பொங்கல் விழாவின் நாயகியாக வலம் வருகின்றார், அதனை ஊடங்கல் பேசி வருவதை பார்க்கின்றோம், பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக நேற்று தஞ்சையில் திருவையாறுக்கு வந்துள்ளார், பொங்கல் காட்சி முடிந்தவுடன் பின்வருமாறு பேட்டியினை தந்தார்.

பேட்டியில் அவர் கூறியதாவது நாட்டின் மிகப் பெரிய கட்சியாக பாஜக உள்ளது எங்கள் கட்சிக்கு விதிமுறைகள் உள்ளது தமிழகத்தில் மிகப் பெரிய கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம், தமிழக சட்டசபை தேர்தலில் மு க ஸ்டாலின் மட்டுமல்ல யாருடன் வேண்டுமானாலும் போட்டியிட தயாராக உள்ளேன், உதயநிதி ஸ்டாலின் புதிதாக திமுகவில் பொறுப்புக்கு வந்துள்ளார், அவர் பெண்களை பற்றி தரம் தாழ்ந்து பேசுகிறார், நாம் அதைப்பற்றி பேச வேண்டியதில்லை, ஆனால் சிதம்பரம் காங்கிரஸில் இருந்து விலகி தா.மா.கா.வில் இணைந்து தனியாக கட்சி தொடங்கி போட்டியிட்டு தோல்வியடைந்த பிறகு மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வந்தார்.

அவர் தனது மகனுக்கு கட்சியில் யாரும்போட்டியாக வந்துவிடக்கூடாது என்பதற்காக எங்களை போன்றவர்களை காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார் பாஜக அதிமுக இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை கடுமையான சட்டம் இயற்றும் வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக அரசு கொண்டுவந்துள்ள.

புதிய வேளாண் சட்ட மசோதாவை சரியாகப் படித்துப் பார்த்தால் இது விவசாயிகளுக்கு சாதகமான மசோதா என புரியும் இவ்வாறு குஷ்பு கூறினார் முன்னதாக தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியத்தில் திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரி   அகரப்பேட்டை , ஆகிய பகுதிகளில் பாஜக கட்சிக் கொடியை குஷ்பூ ஏற்றிவைத்தார் போது பாஜக நகர ஒன்றிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இந்த பேட்டியை கேட்டுக் ‍கொண்டிருந்த முதியவர், இந்தம்மாவும் இப்ப தானய்யா இந்தக்கட்சியில சேர்ந்தாங்க, ஒரு கோடி பேரு…. டெல்லியில…. பனியில போராட்டம் அதில ஒருத்தருக்கு கூடவா வேளாண் சட்டம் புரியல? என்றவர் எல்லாம் சினிமா கால்ஷிட் மாதிரியா ஆகி போச்சுன்னு….. தனக்குள்ளே பேசிக் கொண்டேப் போனார்.

செய்தி குட்டி இளமதி