தஞ்சை ஏப்ரல் 15 நாடெங்கும் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகின்றது, மகாராஷ்டிர அரசு 15 நாட்களுக்கு ‍பொது முடக்கத்தை ‍‍தெரிவித்ததுடன் அதன் முதல்வர் “முதலில் உயிர் வாழ்வோம் அதன் பின்னால் உயிரோடிருந்தால் பொருளாதாரத்தை கவனிப்போம்” என்று உருக்கத்துடன் உத்தவ் தாக்ரே கூறியுள்ளார்.

நமது மாநிலத்தின் காவந்து அமைச்சரவையின் முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் இரண்டாவது அலை அரசின் கை மிறி போயி விட்டது என்று நீதி மன்றத்தில் கூறியதாக தகவல்.

அரசு நாடெங்கும் 50 பேருக்கு மேல் கூடக் கூடாது, திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள், தேநீர், உணவகம் 50 சதவீதம் பேர் மட்டும் மற்றும் 11 மணிக்கு மேல் திறக்க கூடாது என பல்வேறு தடைகளை அமல் படுத்தி வருகின்றது.

இந்த நிலையில் உத்ரகாண்ட் மாநிலத்தில் ஹாரித்துவாரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்ப மேளா விழாவிற்கு எவ்வித தடையுமின்றி நடந்தேறி வருகின்றது, கூட்டம் தான் கொரோனாவின் கூட்டாளி என்ற நிலையில், நேற்று மட்டும் 13,51631 பேர் அங்கு புனித நீராடி உள்ளனர், கடந்த 48 மணி நேரத்தில் இதில் கலந்து கொண்ட 1000திற்கு அதிகமானவர்களுக்கு கொரோனா +Ve என்ற சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன, அங்கே கலந்து கொள்பவர்களில் பலரிடம் கொரோனா -Ve சான்று இல்லை, முகக்கவசமில்லை, பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட, எனவே கும்பமேளாவிற்கு வரும் பக்தர்களே கொரோனா வெடித்து வேகமாக பரப்பும் பரப்பிகளாக செயல் படுவதாக சுகாதார அறிஞர்கள் கூறுகின்றனர்.

இது போன்று எந்த வித அறிவியல் பாதுகாப்பு நடவடிக்கை இல்லாமல் கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் கூடுவதால் பாவம் தொலைவதைக் காட்டிலும் கொரோனா பிணியே கூடும் என்று சுகாதார அறிஞர்கள் கூறுகின்றனர்.

செய்தி தஞ்சை டுடே நிருபர்
புகைப்படம் நன்றி ஒன் இண்டியா.