தஞ்சை சூலை 09: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகராட்சியில் ரூ.25 கோடியில் 94 சாலைகள் தார் சாலையாக மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கும்பகோணம் நகராட்சி பகுதியில் உள்ள சாலைகளில் பாதாள சாக்கடை அபிவிருத்தி மற்றும் குடிநீர் குழாய்கள் புனரமைப்பு பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் தோண்டப்பட்ட சாலைகளில் இதுவரை 30 சதவீத சாலைகள் மட்டுமே புதிதாக போடப்பட்டுள்ளது.

இதையடுத்து கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் தலைமையில் நகராட்சி, ஊராட்சி ஒன்றியம், தாராசுரம், சோழபுரம், திருநாகேஸ்வரம் ஆகிய மூன்று பேரூராட்சிகளின் அதிகாரிகள், பொறியாளர்கள், மற்றும் காண்ட்ராக்டர்களை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மழைக்காலம் தொடங்குவதற்குள் நகராட்சி பகுதியில் புதுப்பிக்கப்படாமல் உள்ள 94 சாலைகளும் ரூ.25 கோடியில் புதிதாக அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/