தஞ்சை சூலை 07: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஹெரிடேஜ் சிட்டி ரோட்டரி சங்கத்தின் 2021-22 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மற்றும் நலத்திட்ட வழங்கும் விழா நடந்தது.

புதிய தலைவர் ராஜா தலைமையில் விழா நடைபெற்றது. 9 ம் ஆண்டின் புதிய தலைவராக ராஜா, செயலாளராக விஜய் சங்கர், பொருளாளராக ராம்பிரசாத் மற்றும் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஆளுநர் பாலாஜி, முன்னாள் மாவட்ட ஆளுநர் ரமேஷ்பாபு, மாவட்ட துணை ஆளுநர் சாய்நாதன், ஜெரால்டு ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் கலந்து கொண்டு வாழ்த்தினார். கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. புதுச்சேரி, மாங்குடி ஆகிய கிராமங்களில் உள்ள ஏழை குடும்பத்திற்கு 4 ஆட்டுக்குட்டிகள் வழங்கப்பட்டன.

மேலும் நீட் தேர்வுக் கட்டணம், தையல் மிஷின், சைக்கிள், ஈஸ்வர் மனவளர்ச்சி குன்றிய பள்ளிக்கு உதவி ஆகிய பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

‍செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/