தஞ்சை மே 04 தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தொகுதியை தொடர்ந்து 6 முறை வெற்றி பெற்று 25 ஆண்டுகளாக தக்கவைத்துள்ளது, தஞ்சை மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன, அவற்றில் கோவில்கள் நிறைந்த கும்பகோணம் சட்டசபை தொகுதி திமுகவின் கோட்டையாக திகழ்ந்து வருகிறது.

இந்த தொகுதியில் கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்தது, இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது, அதன் பிறகு நடந்த தேர்தலில் காங்கிரஸ், திமுக, அதிமுக, ஆகிய கட்சிகள் மாறி மாறி வெற்றி பெற்றன, கடந்த 1991ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. பின்னர் 1996-ஆம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை நடந்த மூன்று சட்டசபை தேர்தலில் தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிட்ட கோ சி மணி வெற்றி பெற்றார், அதன்பிறகு 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட சாக்கோட்டை அன்பழகன் வெற்றி பெற்றார்.

தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கும்பகோணம் பகுதியில் தொடர்ந்து 3வது முறையாக திமுக வேட்பாளராக போட்டியிட்ட சாக்கோட்டை அன்பழகன் வெற்றி பெற்றுள்ளார், இதுவரை 16 பேர் தங்களை கும்பகோணம் தொகுதி சந்தித்துள்ளது திமுக தொடர்ந்து 6 முறை வெற்றி பெற்று 1996 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 25 ஆண்டுகளாக கும்பகோணம் தொகுதியை திமுக தன் வசம் வைத்துள்ளது, இந்த ஆண்டுகளாக கும்பகோணம் தொகுதியை மீண்டும் கைப்பற்ற அதிமுக போராடியும் தொகுதியை கைப்பற்ற இயவில்லை.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.