தஞ்சை சூலை:17- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மாங்குடி ஊராட்சியில் 70 பயனாளிகளுக்கு 20 லட்சத்து 61 ஆயிரத்து மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டா முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட ஆணைகளை அரசு தலைமை கொறடா கோவி. செழியன் வழங்கினார்.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் ஒன்றியம் மாங்குடி ஊராட்சியில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் 24 பயனாளிகளுக்கும் 20 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் தமிழக அரசின் இலவச வீட்டு மனை பட்டா கணவனை இழந்த 9 பயனாளிகளுக்கான மாதாந்திர விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும் 32 பயனாளிகளுக்கு முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளி உதவித் தொகைக்கான ஆணையையும் 5 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்டது மேலும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு 5 லட்சத்துக்கான காசோலையை அரசு தலைமை கொறடா கோவி. செழியன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் 70 பயனாளிகளுக்கு 20 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் மயிலாடுதுறை எம். பி., ராமலிங்கம் திருவிடைமருதூர் ஒன்றிய குழு தலைவர் சுபாதிருநாவுக்கரசு, துணை தலைவர் கருணாநிதி, மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கோட்டாட்சியர் சுகபுத்திரா, தாசில்தார்கள் கண்ணன், பாக்கியராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/