தஞ்சை ஏப்.30: தஞ்சை மாவட்டம் 1.30 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர் என்று கலெக்டர் கோவிந்தராவ் கூறினார், கும்பகோணம் தாலுகா அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி மற்றும் கொரோனா ஆய்வு மேற்கொள்வதற்கு அமைக்கப்பட்டுள்ள முகாமினை தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில் வருகின்ற மே இரண்டாம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை ஈடுபட உள்ள அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் ஆகியோர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளும் விதமாக தொகுதி வாரியாக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதுவரை 60 சதவீதத்தினர் பரிசோதனை மேற்கொண்டுள்ள நிலையில் 40 சதவீதத்தினர் இன்று பரிசோதனை மேற்கொள்வார்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் முகவர்கள் பத்திரிக்கையாளர்கள் செல்வதற்கான வழிகள் குறித்தும் அவர்களுக்கு முக கவசம் டெய்லி சார் உள்ளிட்டவைகள் வழங்கப்படும் கடந்த தேர்தலை விட தற்போது கூடுதலாக வாக்கு எண்ணுவதற்கு ஒரு அறை அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார் மேலும் இதுவரை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும், பொது மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனா முதல் அ‍லைக்கு எப்படி பின்பற்றினார்களோ, அதே போன்று இரண்டாவது கொரேனா அலைக்கு பின்பற்றி மக்கள் கட்டுப்படுத்துவார்கள் என கூறினார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.