கஜா புயலின் சீற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி வேதாரணியம் பகுதியாகும், அங்குள்ள கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் மிகவும் பாதித்தது வன விலங்குள் நீரில் அடித்துச் சென்றும், உணவின்றியும் இறந்து போயின, இதனால் கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாகை மாவட்டம் கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் அடுத்தவாரம் திறக்கப்படும் என தஞ்சை சரக வனப் பாதுகாவலர் தெரிவித்துள்ளார், வேதாரண்யம் அருகில் கோடியக்கரை வன விலங்குகள் சரணாலயம் உள்ளது இது 24 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது இது ஒரு பசுமைமாறாக் காடாகும் இதில் பன்றி குரங்கு குதிரை நரி மான் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன.
அதன் அருகில் பறவைகள் சரணாலயமும் உள்ளது இதில் உள்ளான் கடல் காகம் செங்கால் நாரை கூழைக்கடா பூநாரை உள்ளிட்ட 250 வகையான பறவைகள் வருகின்றன, அக்டோபர் முதல் மார்ச் வரை இங்கு இந்த பறவைகள் வந்து செல்கின்றன.
கொரோனா பரவலைத் தொடர்ந்து தொடர்ந்து மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது, இதனால் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது, தற்பொழுது அரசு உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி இந்த சரணாலயம் சுற்றுலாப் பயணிகளுக்காக அடுத்தவாரம் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு இந்த வருடம் இமாலய கிருபன் கழுகு இமயமலையில் இருந்து வந்துள்ளது, இது கோடியக்கரைக்கு 58 ஆண்டுகளுக்குப் பிறகு வந்துள்ளது, இது கடைசியாக 1963 ஆம் ஆண்டு இந்த பறவைகள் சரணாலயத்துக்கு வந்து இருந்தது, இந்த இமாலய கிருபன் வகையை சேர்ந்த கழுகுகள் சாதாரணமாக ஆறு கிலோ முதல் 25 கிலோ எடை வரையில் இருக்கும், இந்தப் பறவைகள் சரணாலயத்திற்கு அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை ஈராக், ஈரான், ரஷ்யா, ஆஸ்திரேலியா, இலங்கை ஆர்டிக் பிரதேசத்தில் இருந்தும் பல பறவைகள் வந்து செல்லும்.
செய்தி ம.செந்தில்குமார்