தஞ்சாவூர் டிச.17- தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் பெரியார் தொடர் கல்வி கல்லூரி வளாகம் முதல் தளத்தில், மன்னர் சரபோஜி கல்லூரி திராவிடர் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. மாணவர்கள் சந்திப்பு கூட்டத்தில் தஞ்சை மாநகரஅமைப்பாளர் வன்னிப்பட்டு செ.தமிழ்ச்செல்வம் தலைமையில் மாவட்ட மாணவர் கழக தலைவர் பொறியாளர் ரா.கபிலன் முன்னிலை வகித்தனர்.

மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன் ஆகியோர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். கூட்டத்தில் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் ஜாதி ஒழிப்பு, சமூகநீதி, நீட்தேர்வு, திராவிடர்கழகத்தின் பணிகள், மற்றும் ,திராவிட மாணவர் கழகம் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்தும், தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் விடுதலை ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் அயராத மனிதநேய தொண்டற பணிகள் பற்றியும், அவர்களின் ஓய்வின்றி அயராத உழைப்பின் மாண்பை பற்றியும்.மாணவர்கள் மத்தியில்விளக்கவுரையாற்றினார்.

கூட்டத்தில் தஞ்சை மாநகர தலைவர்பா. நரேந்திரன், தஞ்சை மாநகர செயலாளர் கரந்தை அ.டேவிட், சரபோஜி கல்லூரி மாணவர்கள் சே.ஆகாஷ், து.சிபிதுறை,,வ.அருண்குமார், க.மூவழகன், அ.மெக்ராத்யோபு, ம.பொன்னரசு, மற்றும் மாணவர்கள், கலந்துக் கொண்டனர். சிறப்பித்தனர். கூட்டத்தில்இறுதியில் புதிய பொறுப்பாளராக மன்னர் சரபோஜி கல்லூரி திராவிட மாணவர் கழக அமைப்பாளராக சே.ஆகாஷ் அறிவிக்கப்பட்டார்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/