தஞ்சாவூர் மார்ச்:9- மேகதாது அணை கட்ட ரூ.1000 கோடி ஒதுக்கீடு! கர்நாடக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் சமவெளி விவசாயிகள் இயக்கம் சார்பில் தஞ்சையில் நடைபெற்றது, மேகதாது அணை கட்ட ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்த கர்நாடக அரசை கண்டித்தும், கர்நாடக அரசுக்கு மறைமுகமாக துணைபோகும் ஒன்றிய அரசை கண்டித்தும், உச்ச நீதிமன்ற நடுவர் மன்றத் தீர்ப்பை மீறி செயல்படும் கர்நாடக அரசு மீது தமிழக அரச அவமதிப்பு வழக்குதொடர வேண்டும்என்பதை வலியுறுத்தியும் ரயில் நிலையம் முன்பு சமவெளி விவசாயிகள் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சு.பழனிராஜன்,தலைமை வகித்தார்.தமிழர் தேசியமுன்னணி தேர்தல்பணிக்குழு பொறுப்பாளர்அய்யனாபுரம் சி.முருகேசன், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், விவசாயிகள் சங்க தலைவர்ஏ.கே.ஆர். ரவிச்சந்திரன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் வீர மோகன், மாநில துணை செயலாளர் சாமி நடராஜன் ஆகியோர் கண்டன சிறப்புரை யாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தின் போது கர்நாடக அரசு மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட துணை செயலாளர் துரை மதிவாணன், சித்திரக்குடி விவசாய சங்க நிர்வாகிகள் கலைக்கோவன், ஆண்டவர், சீனிவாசன், ஒரத்தூர் கனகராஜ், கடம்பங்குடி,முருகானந்தம், மைக்கேல்பட்டி விக்டர், எழுத்தாளர் சாம்பான், ஓய்வுபெற்றோர் சங்க பொதுச்செயலாளர் செயலாளர் பி.அப்பாத்துரை, நிர்வாகிகே.சுந்தர பாண்டியன், மக்கள் அதிகாரம் நிர்வாகிகள் தேவா,அருள், எழுத்தாளர் சாம்பான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/