தஞ்சை மறைந்த இனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி தஞ்சை மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில், மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமையில் பேராசிரியரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் எம். இராமச்சந்திரன், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்.இராமநாதன், மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர். அஞ்சுகம்பூபதி, மாவட்ட திமுக பொருளாளர் L.G.அண்ணா ,ஒன்றிய திமுக பொறுப்பாளர்கள், பேராசிரியரின் நண்பர் துரை. நாகராஜன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தமிழ் சான்றோர் பெருமக்கள் கல்வியாளர்கள் ஆசிரியர் பெருமக்களும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்
தஞ்சை