தஞ்சாவூர் மார்ச்: 2-தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா ஒக்கநாடு மேலையூரில் தந்தை பெரியாரின் இளைய திலகங்கள் கபாடி கழகத்தின் சார்பில் ஜனவரி 19 ந்தேதி தொடங்கி 40 நாட்களாக நடைபெற்ற பயிற்சி முகாம் இன்று நிறைவுபெற்றது விழாவில் கனிம வளத்துறை உதவி இயக்குனரும், பெரியார் அறக்கட்டளை உறுப்பினருமான நெடுவை கு.அய்யாதுரை அவர்கள் கலந்துகொண்டு கபாடி கழகத்தின் புதிய சீருடையை அறிமுகம் செய்து உரையாற்றினார்.

நிகழ்வில் ஒக்கநாடு மேலையூர் ஊ.ம.தலைவர் சித்ரா ரவிச்சந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் ம.துரைரராசு, ஒக்கநாடு கீழையூர் ஊ.ம.தலைவர் சுரேஷ் குமார், ஒன்றிய குழு உறுப்பினர் பாரத், த.கா வி.சங்க மாவட்ட செயலாளர் ம.மணி. பாலா கன்ஸ்ட்ரக்க்ஷன் ப.பபாலகிருஷ்ணன், பயிற்சியாளர் பின்னையூர் அசோகன், மாரத்தான் பாஸ்கர் உள்ளிட்ட பலரும் பங்கேற்று சிறப்பித்தனர்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/