தஞ்சாவூர் நவ: 14- தஞ்சையில் சட்ட விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாவட்ட முதன்மை நீதிபதி மதுசூதனன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்திய நாடு சுதந்திரம் 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டும் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டும் சட்ட சேவை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாபெரும் சட்ட விழிப்புணர்வு வாகனப் பிரச்சார தொடங்கியது தஞ்சை நீதிமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த பிரசார வாகனத்தை மாவட்ட முதன்மை நீதிபதி மதுசூதனன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த அதிநவீன மின்னணு வாகன விழிப்புணர்வு பிரச்சாரமானது, தஞ்சை நகரின் முக்கிய பகுதிகளுக்கு சென்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயல்பாடுகளை குறித்து பொது மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தியது.

மேலும் இந்த சட்ட விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் சட்டம் மற்றும் சட்டம் சாராத துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த சட்ட விழிப்புணர்வு பிரச்சாரத்தில் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தேசிய மகளிர் ஆணையம் புதுதில்லி இணைந்து பெண்களுக்கான சட்ட கருத்தரங்கை தஞ்சை மாவட்ட நீதிநன்ற வளாகத்தில் நடத்தியது முகாமிற்கு மாவட்ட முதன்மை நீதிபதி மதுசூதனன் தலைமை தாங்கினார்.

கருத்தரங்கில் கூடுதல் மாவட்ட நீதிபதி மலர்விழி, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி இந்திராணி, ஆகியோர் கலந்துகொண்டு பெண்கள் மேம்பாடு குறித்து உரையாற்றினர். மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சட்ட பாதுகாப்பு குறித்து வழக்கறிஞர்கள் பூங்கோதை, கோமதி, ஆகியோர் உரையாற்றினர். கருத்தரங்கில் 120க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். கருத்தரங்கு ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு செயலாளரும் நீதிபதியுமான சுதா மற்றும் தன்னார்வலர்கள் அலுவலர்கள் செய்திருந்தனர்.

க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/