வருகின்ற 15 டிசம்பர் செவ்வாயன்று தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மய்யத்தில் காலை 10 மணி முதல் அன்று ஒரு நாள் மட்டும் தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது நடைபெற உள்ளது.

இந்த முகாம் குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளார், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த டிப்ளமோ மற்றும் பொறியியல் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக இது நடத்தப்படுகிறது, இதனால் தங்களது வேலைவாய்ப்பு பதிவு மூப்பு பரிந்துரையில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு இ‍ளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமெனவும் தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.