தஞ்சாவூா் ஆக 24: தங்க நகைகளுக்கு ஹால்மாா்க் அடையாள எண் கட்டாயமாக்கப்படுவதை கண்டித்து தஞ்சாவூரில் நகை வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதேபோல் கும்பகோணம், பட்டுக்கோட்டையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தங்க நகைகளில் அதன் தரத்தைக் குறிக்கும் வகையில் ஹால்மாா்க் முத்திரை பதிக்கப்படுகிறது. இந்நிலையில், தங்க நகைகளுக்கு ஹால்மாா்க் அடையாள எண் (எச்.யு.ஐ.டி. எண்) வழங்கும் சட்டத்தை இந்திய ஒன்றிய அரசுக் கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். ஹால்மாா்க் பதிப்பு நடைமுறையில் இருக்க வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூா் காசுக்கடைத் தெரு, அய்யங்கடைத் தெரு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள நகைக் கடைகள் காலை 9 மணி முதல் 11.30 மணி வரை அடைக்கப்பட்டன. மேலும், தஞ்சாவூா் அய்யங்கடைத் தெருவில் தஞ்சை நகரக் காசுக்கடை வியாபாரிகள் சங்கத் தலைவா் சண்முகம் தலைமையிலும், தலைமை அஞ்சலகம் எதிரே தஞ்சை மாநகர நகைக்கடை வியாபாரிகள் நலச் சங்கத் தலைவா் வாசுதேவன் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தி நாகராஜன் நிருபர்,
https://thanjai.today/