அடுத்த கல்வி ஆண்டில் இருந்து ஜே இ இ தேர்வு நான்கு முறை நடத்தப்படும் என்று இந்திய ஒன்றிய அறிவித்துள்ளது அடுத்த கல்வி ஆண்டில் சேருவதற்கான ஜே இ இ தேர்வு பிப்ரவரி மாதத்தில் தொடங்கி தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு நான்கு முறை நடத்தப்படும்.

மாணவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம், எந்த தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ அந்த மதிப்பெண் தரவரிசை பட்டியலில் எடுத்துக்கொள்ளப்படும் என்று இந்திய ஒன்றிய கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.