தஞ்சை சூலை 15: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடந்த ஜமாபந்தியில் மனு அளித்தவர்களில் முதல்கட்டமாக 6 பேருக்கு சப்- கலெக்டர் பாலசந்தர் மனைப்பட்டா வழங்கினார்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வருவாய் வட்டத்திற்கான ஜமாபந்தி கடந்த ஜூன் 25ம் தேதி தொடங்கி, 30ம் தேதி வரை, வருவாய் தீர்வாய அலுவலரும், பட்டுக்கோட்டை சப்-கலெக்டர் பாலச்சந்தர் தலைமையில் நடந்தது.

பட்டுக்கோட்டை தாசில்தார் தரணிகா, தனி தாசில்தார் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) சாந்தகுமார் மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர். இதில், பொதுமக்கள் ஆன்லைன் மூலம் முதியோர் உதவித் தொகை, விதவை உதவித்தொகை, வீட்டு மனைப் பட்டா என 9 மனுக்களை அளித்தனர்.

இதில், வருவாய்த்துறையினர் ஆய்வுகள் நடத்தினர். தொடர்ந்து முதல்கட்டமாக 6 பேருக்கு சப் கலெக்டர் பாலசந்தர் மனைப்பட்டா வழங்கினார். அப்போது சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் சாந்தகுமார் உடனிருந்தார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/