தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே வல்லம் புதூா் சேத்தி கிராமத்தில் 87 பேருக்கு வீட்டு மனைப் பட்டா ஆணைகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் பேசியதாவது:

ஏழை மக்களின் நலனுக்காகத் தமிழக முதல்வா் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகிறாா். அதனடிப்படையில் தமிழக அரசு ஏழை மக்களுக்காக விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்க ஆணையிட்டுள்ளது.

அதன்படி வல்லம் புதூா் சேத்தி கிராமத்தில் பல ஆண்டுகளாக வீட்டு மனைப் பட்டாவுக்கு விண்ணப்பித்து, பெற இயலாத 87 பயனாளிகளுக்கு இப்போது வீட்டுமனை பட்டாவுக்கான ஆணை வழங்கப்பட்டது.

இதில், தமிழ்நாடு அரசின் அரசாணை எண். 318-ன் கீழ் ஆட்சேபனையற்ற புறம்போக்கில் குடியிருந்து வரும் 47 பேருக்கும், நத்தம் வகைப்பாடுடைய புலத்தில் குடியிருக்கும் 40 பேருக்கும் விலையில்லா வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

தஞ்சாவூா் எம்.பி. பழனிமாணிக்கம், எம்எல்ஏக்கள் திருவையாறு துரை.சந்திரசேகரன், தஞ்சை டி.கே.ஜி. நீலமேகம், கூடுதல் ஆட்சியா் (வருவாய்) என்.ஓ. சுகபுத்ரா, மாவட்ட ஊராட்சித் தலைவா் உஷா புண்ணியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/