தஞ்சை ஏப்ரல் 13 தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ‍கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு இதனால் இரண்டாவது போட வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர், தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி தொடங்கியது.

தொடக்கம் முதலே கோவி ஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் போடப்படுகின்றன, அப்போது மூன்றாம் கட்ட பரிசோதனை முடிந்து விட்டதால் அது குறித்து பொதுமக்களிடையே தயக்கம் நிலவியது, எனவே பெரும்பாலானோர் கோவில் சில்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர், மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் கோவேக்சின் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் எனக்கொண்டு வந்தது.

இந்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 28 நாட்களுக்கு முன் முதல் கட்டமாக கோவேக்சின் தடுப்பூசி 90 பேர் போட்டுக்கொண்டனர், இவர்கள் இரண்டாம் கட்ட தடுப்பூசி போடுவதற்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று காலை சென்ற போது இவர்களில் 20 பேருக்கு மட்டுமே தடுப்பூசி இருப்பு இருந்தது, எனவே 70 பேர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதனால் தரவரிசையில் முதல் கட்ட தடுப்பூசி போடுவதன் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது தொடக்கத்தில் கோவேக்சின் குறித்து மக்களிடையே தயக்கம் விலகியது, தமிழகத்தில் இந்த தடுப்பூசி தஞ்சை மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உட்பட 6 மருத்துவமனைகளுக்கு மட்டுமே பரிசோதனை அடிப்படையில் போடப்பட்டு வந்தது, இந்த தடுப்பூசியை நிறைய பேர் போட்டுக் கொள்ள முன்வந்ததே தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குறைந்துவிட்டது காரணம் என்றும், விரைவில் வரவழைக்கப்பட்டு மக்களுக்கு போடப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது இதனிடையே கோவி ஷீல்டு எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் போடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி க.சசிகுமார் நிருபர்
தஞ்சை