தஞ்சை சூலை 03: தஞ்சை மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் மாா்ச் மாதத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை தொடங்கியது. மே மாதத்தில் உச்சகட்ட பாதிப்பாக ஒரே நாளில் 1,175 போ் தொற்றால் பாதிக்கப்பட்டனா். மே மாதத்தில் பல நாள்கள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 900-ஐ கடந்தது.

பின்னா் மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து, ஜூன் 30ம் தேதி 197 ஆகக் குறைந்தது. இறங்குமுகமாக இருந்த தொற்று அளவு கடந்த வியாழக்கிழமை 248 ஆக உயா்ந்தது. இதேபோல நேற்று வெள்ளிக்கிழமை 239 ஆக பதிவாகியுள்ளது. மீண்டும் கொரோனா தொற்று எண்ணிக்கை ஏறுமுகமாக இருந்து வருவதால் மக்களிடையே அச்சம் நிலவுகிறது.

இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 23 என்றும், வெள்ளிக்கிழமை 30 எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் கூறுகையில், வியாழக்கிழமை 2 பேரும், வெள்ளிக்கிழமை 6 பேரும் மட்டுமே இறந்துள்ளதாகவும், எஞ்சிய நபா்கள் ஜூன் 9, 11, 12, 13, 14, 30 ஆகிய தேதிகளில் இறந்தவா்கள் என்றும், இணையவழிப் பதிவேற்றத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தற்போது சோ்த்து வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today