கூகுள் பே, ஃபோன் பே போன்ற ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதையும் தடுத்திட தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று தஞ்சையில் மின்னனு வாக்குப் பதிவு இயந்திரத்தை வாக்காளர்கள் பயன்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்திட முதல் கட்டமாக இன்று 5 சதவிகித EVM இயந்திரங்களை அனுப்பி வைத்தப் பின் தஞ்சை மாவட்ட ஆட்சியர் நிருபர்களிடம் பேட்டியளித்தார்.

தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக பூட்டி சில் வைக்கப்பட்ட EVM இயந்திரங்கள் / VV பேட் இயந்திரங்கள் வைத்திருந்த அறையை அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் இன்று சீலை பிரித்து தஞ்சை மாவட்டம் முழுவதிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்திட 5 சதவிகித EVM இயந்திரங்களை அனுப்பி வைத்த
தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ்
பின்னர் செய்தியாளர்களிடம் பின் வருமாறு பேசினார்.


தஞ்சை மாவட்டத்திற்கு தேவையான 4 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரிசோதிக்கப்பட்டு தயராக இருக்கிறது.
அவற்றில் 5 சதவிகித இயந்திரங்கள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தப்படும் என்றவர்.
102 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை அனைத்திற்கும் வெப் கேமராக்கள் பொருத்தப்படும்.

கூகுள் பே ஃபோன் பே உள்ளிட்ட ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் மூலம் வாக்குக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுத்திட தகவல் தொழில் நுட்ப வல்லுநர் குழுக்களை வைத்து கண்காணிக்கப்படும் எனவும். வாக்கு எண்ணும் மையமான குந்தவை நாச்சியார் அரசு கல்லுரியையும் ஆய்வு செய்தார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்
தஞ்சை