தஞ்சாவூர் சூலை 23: தஞ்சை மாவட்டத்தில் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் நேற்று 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 178 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 66 ஆயிரத்து 714 ஆக உயர்ந்தது. தற்போது 1,684 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் பலியானார்கள். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 834 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழ்நாடு அரசு மூன்றாம் அலை வந்தால் அதனை எதிர்கொள்ளும் கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம் என்று கூறியுள்ளது, தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும் அதனை உறுதிப் படுத்தும் விதமாகவே பேசியுள்ளார்.

ஆனால் இதற்கு முன்பு தமிழ்நாட்டின் சுகாதாரச் செயலர் கூறும் போது, தஞ்சை மாவட்ட பகுதிகளில் பொதுமக்கள் முகக்கவசம் அ‍ணிவதில்லை. அதுவே தஞ்சை மாவட்டத்தில் தொற்று குறையாமல் இருப்பதற்கு காரணம் என்று கூறினார்.

மாவட்ட ஆட்சியர் அவர்கள் கடைகள் தெருக்களில் சோதனைகள் செய்து அறிவுறுத்திய விடயத்தை நாம் அறிவோம், எனவே பொது மக்கள், முகக்கவசம், சரியான இடைவெளி, தேவையில்லாத சந்திப்புகளை தவிர்த்து, கொரோனாத் தொற்றிலிருந்து காத்துக் கொள்வோம் என தஞ்சை டுடே சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்.

செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/