தஞ்சாவூர் சன 13: தஞ்சை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், மணிக்கூண்டு, தஞ்சை சரபோஜி மார்கெட், காமராஜ் மார்க்கெட், உள்ளிட்ட 18 க்கும் மேற்பட்ட வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனை இன்று தமிழக அரசு கூடுதல் செயலாளரும், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை இயக்குனருமான சிவதாஸ் மீனா ஆய்வு செய்தார். பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பழைய பேருந்து நிலையம், ராஜப்பா பூங்கா மணிகூண்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திட்ட பணிகள் அனைத்தும் 2023-ம் ஆண்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வரை பாதி பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது.
மாதம் ஒன்றுக்கு 30 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும் ஆனால், குறைவாகத்தான் செலவு செய்யப்படுகிறது. விரைவில் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/