தஞ்சை மார்ச் 17 தஞ்சையில் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது, தமிழ்நாட்டில் அதிமுக அரசு மாநில உரிமைகளை எல்லாம் மத்திய அரசுக்கு அடகு வைத்துவிட்டு சமூகநீதி சட்டங்களை எல்லாம் குழிதோண்டிப் புதைத்து இருக்கிறது, இப்படி ஒரு கொடுமையான ஆட்சி அதிமுக தலைமையில் நடந்து கொண்டிருக்கிறது, திமுக கூட்டணி என்பது, முற்போக்குக் கூட்டணி மட்டுமல்ல, தமிழ் நாட்டுக்கு விடுதலை தரக்கூடிய கூட்டணி என்பதோடு அடகு வைக்கப்பட்ட அதிமுகவுக்கு ஒரு நல்ல தோல்வியைக் கொடுத்து அதன் மூலம் வெற்றி தரக்கூடிய நல்வாய்ப்பு உள்ள கூட்டணி.

திமுக கூட்டணி கொள்கை கூட்டணி, மாறாக, அதிமுக கூட்டணி என்பது கொள்கைக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்பதை வெளிப்படையாகக் கூறும் கூட்டணி, எனவே திராவிடர் கழகம் திமுக கூட்டணிக்கு பிரச்சாரத்தை வருகிற 18-ஆம் தேதி வியாழக்கிழமை முதல் 4 ஆம் தேதி என்னுடைய தலைமையில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளோம் என்பதை தெரிவித்தார்.

திருவாரூரில் பிரச்சாரத்தை தொடங்க உள்ளது குறிப்பாக எங்களுடைய இலக்கு எங்கெல்லாம் பாஜக போட்டியிடுகிறது, அங்கு தீவிரமான பிரச்சாரத்தில் செய்ய உள்ளோம், இங்கு பா.ஜ.க காலூன்ற முடியாது, காரணம் இது பெரியாரின் சமூக நீதி மண், இந்த மண்ணில் மத வெறியை காலூன்ற முடியாது என்பதை எடுத்துக் கூறி பிரச்சாரம் செய்ய உள்ளோம், திமுகவின் தேர்தல் அறிக்கை என்பது கொள்கை திட்டங்களை அடிப்படையாகக் கொண்டது, எப்போதும் இந்தியாவுக்கு கதாநாயகனாக திகழக்கூடியதாக தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இருக்கும்.

தி.மு.க வரும் தேர்தலில் உறுதியாக ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பது தெரிந்த ஒன்று. தமிழகத்தில் தி.மு.க., கூட்டணியும் அதேபோல் அ.தி.மு.க., பா.ஜா.க.கூட்டணி மட்டும் தான் மற்ற கூட்டணி எல்லாம் பொருட்படுத்த வேண்டிய கூட்டணி இல்லை, அது கூட்டணி என்பதை விட கூட்டு அணி  என்று தான் சொல்ல வேண்டும்.

பி.எஸ்.சி நர்சிங் படிப்புக்கு நீட்தேர்வு என்று கூறப்பட்டுள்ளதால் நீட்தேர்வு எவ்வளவு கொடுமையானது என்பதை நாம் அறிவோம், இப்போது நர்சிங் தேர்விலும் அவை வந்துள்ளது மிகப்பெரிய கேடு, ஆகவே தான் இந்த ஆட்சி ஏன் ஒழிக்கப்படவேண்டும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்கு அவர்களே காரணங்களை முன்வைத்து கொண்டிருக்கின்றார்கள் இவ்வாறு கி வீரமணி கூறினார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.