தஞ்சையில் தென்னக ரயில்வே ஊழியர் சங்க ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் ராஜா ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து பிப்ரவரி ஒன்றாம் தேதி கவனயீர்ப்பு நாள் கடைப்பிடிக்கப்படும் எனவும்.

கொரோனா பெருந்தோற்று காரணம் காட்டி மத்திய அரசு ரயில்வே ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 18 மாத அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, அதனை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை வைத்த அவர். தற்போது இயக்கப்பட கூடிய அனைத்து ரயில்களையும் நிறுத்திவிட்டு சிறப்பு ரயில்கள் என்ற பெயரில் இயக்குவதே ரயில்வே துறை மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை நிறுத்தி விட்டு அதனை தனியார் மயமாக்குவதற்குதான் எனவும் தெரிவித்தார்.